அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் 

அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் 
X
குமரி
உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடத்தின் அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. மருத்துவ கல்லூரி டீன்  ராமலட்சுமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.          மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கிங்கிலி ஜெபசிங்,  துணை முதல்வர் டாக்டர் சுரேஷ் பாலன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சன், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர் விஜயலட்சுமி, ரெனி மோள், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜெயலால்  உள்ளிட்டோர் கலந்து .       இதில் மருத்துவ மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர், பயிற்சி பள்ளி மாணவிகளும் பங்கேற்றனர்.
Next Story