பெரியத்தும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்

திருவள்ளுவர் தின விழா ஒப்புவித்தல் போட்டி
நாகை மாவட்டம் கீழையூர் அருகே பெரியத்தும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் தின விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பட்டதாரி ஆசிரியர் கே.செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பி.எம்.உத்திராபதி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் தி.தமிழ்மாறன், பள்ளி மேலாண்மை குழு தலைவி த.சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியரும், புலவருமான தி.வேதரெத்தினம் திருவள்ளுவர் சிந்தனை களம் என்ற அமைப்பை நிறுவி, திருக்குறள் பலகை வழங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் க.ரவிச்சந்திரன், கவிஞரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான சுதா அருணகிரி, பேச்சாளர் ரா.பிரித்தி ஆகியோர், வள்ளுவம் காப்போம் என்ற தலைப்பில் பேசினர். பள்ளியில், மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் டி. செல்வ சிகாமணி வரவேற்றார். முடிவில், பட்டதாரி ஆசிரியை பா.பாரதி நன்றி கூறினார்.
Next Story