புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
X
இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஒரு நாள் பயிற்சி முகாம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், திருமருகல் ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு, இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, வட்டார கல்வி அலுவலர் ரவி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஃபாஜிகனி தொடங்கி வைத்தார். பேரணி, பள்ளியில் தொடங்கி, நடுக்கடை மெயின் ரோட்டில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக பள்ளியில் முடிவடைந்தது. தொடர்ந்து பள்ளியில் நடந்த முகாமை, தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர் துரைமுருகு தொடங்கி வைத்தார். பயிற்சியாளர்கள் கோவிந்தசாமி, ஜோஸ்தி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story