இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு குவிந்த மக்கள்.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே இன்று (பிப்.4) மாலை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுபடி இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலையை மீட்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நிர்வாகி அரச பாண்டி வரவேற்றார் . கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது இது தொடக்கம் என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
Next Story