தக்கலை குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்தார்

தக்கலை குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்தார்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை குழந்தைகள் மையம் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார்  42 வருடங்களாக அரசு கட்டிடத்தில்  செயல்பட்டு வந்தது. அக்கட்டிடடம்  மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை இடித்து ஒரு அங்கன்வாடி மையத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான தனி அறை, சமையலுக்கு தனி அறை, பொருட்கள் வைக்கும் இடம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், குழந்தைகளுக்கான கழிப்பறை, குடிநீர் வசதி, உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடம் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.     இந்த குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று 4-ம் தேதி ரிப்பன் வெட்டி   திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.   நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி,  பங்கு பணியாளர் மரிய வின்சென்ட், கல்குளம் வட்டாட்சியர் சஜித், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பிரேமலதா, துறை அலுவலர்கள், ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story