திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
X
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாதந்தோறும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த விண்ணப்பங்களில் தகுதியான நான்கு ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேற்று காலை, கோவில் உற்சவ மண்டபத்தில் முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. திருமண ஜோடிகளுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 10,000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தாலி, மணமக்கள் ஆடை, சீர்வரிசை பாத்திரங்கள் உள்ளிட்ட, 60,000 ரூபாய் மதிப்பில், அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திருமண விழாவில் கோவில் செயல் அலுவலர் குமரவேல், திருப்போரூர் பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், வார்டு கவுன்சிலர்கள் லோகு உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.
Next Story