நொய்யல் அருகே பேரன்கள் உடன் டூவீலரில் சென்றவர் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து.

நொய்யல் அருகே பேரன்கள் உடன் டூவீலரில் சென்றவர் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து.
நொய்யல் அருகே பேரன்கள் உடன் டூவீலரில் சென்றவர் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, நொய்யல் குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 62. இவரது பேரன் விவித் வயது 9. மற்றொரு பேரன் ராகுல் வயது 12. இவர்கள் மூன்று பேரும் பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு 7:30- மணி அளவில், நொய்யல் ரயில்வே கேட் அருகே அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, எதிர் திசையில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, பெரியவட்டம் பகுதியைச் சேர்ந்த மயில்வேல் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆட்டோ பொன்னுச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பொன்னுச்சாமி மற்றும் உடன் பயணித்த பேரன்கள் விவித்,ராகுல் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு பொன்னுச்சாமியை கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விவித் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த பொன்னுச்சாமி மகன் ரவிக்குமார் வயது 37 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆட்டோவை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மயில் வேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story