வாலாஜா நகரம் கிராமத்தில் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி

வாலாஜா நகரம் கிராமத்தில் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி
X
வாலாஜா நகரம் கிராமத்தில் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்,பிப்.5- அரியலூர் அருகேயுள்ள வாலாஜா நகரம் கிராமத்தில், வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேளாண் துணைஇயக்குநர் கணேசன் தலைமை வகித்து, வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதில் விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜ்கலா, அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பஞ்ச காவியாம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்ற வேளாண் இடுப்பொருள்கள் தயாரிக்கும் முறைகள் குறித்தும், மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களில் இயற்கையாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். மண் மாதிரி நிலைய வேளாண் அலுவலர் ஜான்சன், மண்மாதிரி எடுக்கும் முறை, அதன்முக்கியத்துவம் மற்றும் அதனால் உண்டாகும் நன்மைகள் குறித்து பேசினார். வேளாண் உதவி இயக்குநர் சாந்தி வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலர் பால்ஜான்சன், உதவி அலுவலர்கள் வேல்முருகன், ஸ்ரீதேவி, அருள்செல்வி, ராஜகிரி, லெனின் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அன்பழகன், வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story