பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், குமாராபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டாம்பாளையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.51 இலட்சம் மதிப்பீட்டில் குள்ளநாயக்கன்பாளையம் முதல் பந்தகாமேடு சாலை வரை புதியதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சாலை பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தகாலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடியில் குழந்தைகளின் வருகை விபரம், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.அதனைத்தொடர்ந்து, காடச்சநல்லூர், ஐந்துபனை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளதையும், சீராம்பாளையம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து, கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு, இரத்த பரிசோதனை மாதிரி விபரம், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், படுக்கை வசதிகள், கர்ப்பிணித்தாய்மார்கள் பதிவு விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
Next Story