உத்தனப்பள்ளி அருகே தூக்கிட்டு நாதஸ்வர கலைஞர் தற்கொலை.

X

உத்தனப்பள்ளி அருகே தூக்கிட்டு நாதஸ்வர கலைஞர் தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் உத்தனப்பள்ளி அருகே கொம்மேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (22) நாதஸ்வர கலைஞர். இவருக்கும். மதுரை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறி இரண்டு பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் திடீரென அந்த பெண், ராஜேசுடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொணடார். இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story