கந்திகுப்பம் அருகே காப்பர் ஓயர் திருட முயன்றவர் கைது.

X

கந்திகுப்பம் அருகே காப்பர் ஓயர் திருட முயன்றவர் கைது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சித்தர்மால் (45). இவர் கந்திகுப்பம் அடுத்த அச்சமங்கலம் என்ற இடத்தில் தனியார் கிரானைட் தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வை யாளராக பணியற்றி வருகிறார். இவர் பணியில் இருந்த போது உள்ளே நுழைந்த நபர் ஒருவர் அங்கு வைக்கபட்டிருந்தத 80 மீட்டர் காப்பர் ஒயரை திருடி தப்பி செல்ல முயன்ற போது இதை கவனித்த சித்தர்மால் அவரை கையும் களவுமாக பிடித்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள நல்ல கவுண்டன் கொட்டாய்யைச் சேர்ந்த முருகன் (43) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story