ஓசூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

ஓசூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
X
ஓசூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீரா பல்நோக்கு மருத்துவமனை, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு போலீசார் அரிமா சங்கங்கள் ஆகியோர் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் நேற்று உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாயில் முன்பு இந்த பேரணியை ஓசூர் காவல்துறை ஏ எஸ் பி அக்ஷய் அணில் வகாரே கொடி அசைத்து துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் மாணவ மாணவியர்கள், ஆசிரியர் ஆசிரியைகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகளில் சென்று தனியார் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
Next Story