கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!
X
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் (29) என்ற வாலிபர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story