சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம்

X

போலீசார் விசாரணை
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இங்குள்ள குட்டையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி குட்டையில் பிணமாக கிடந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story