குமரி : கடலில் விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி

குமரி : கடலில் விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி
X
தேங்காபட்டணம்
குமரி மாவட்டம்  தேங்காப்பட்டணம் அருகே இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் மரிய ஜான் (64). மீனவர். இவர் கடந்த மாதம் 8-ம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து தூத்தூரை சேர்ந்த அருள் (37) என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார்.  உடன் 13 தொழிலாளர்கள் சென்றனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை 100 கடல் மைல் தூரத்தில் இருந்து தேங்கபட்டினம் திரும்பிக் கொண்டு இருந்தனர்.         அப்போது மரிய ஜான் திடீரென மயங்கி விசைப்படகில் சாய்ந்தார். இதை கவனித்த உடன் சென்ற தொழிலாளர்கள்  அவரை நேற்று பிற்பகல் தேங்காப்பட்டணம்  துறைமுகத்தில் கரை சேர்த்தனர். அப்போது மரிய ஜாணை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது.        இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆழ்கடலில் படகில் மயங்கி பலியான தொழிலாளி மரிய ஜாணுக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் நான்கு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.
Next Story