சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனைக்கு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனைக்கு
X
ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வற்புறுத்துவதால் நோயாளிகள் அவதி
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக அவர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது ஸ்கேன் பரிசோதனை செய்பவர்கள் ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அவர்களில் சிலர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் செல்போன்கள் மூலம் பணத்தை செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி முதல்வர் தேவி மீனாள் கூறும் போது, ஸ்கேன் பரிசோதனை செய்யும் நோயாளிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்கள் ஊழியர்களிடம் தங்களது செல்போன் எண்ணை தெரிவித்துவிட்டு பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Next Story