சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 45), விசைத்தறி உரிமையாளரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்து பெற்று வந்தார். ஆனால் குணமாகாத நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட பிரபு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story