சேலம் அம்மாபாளையத்தில் புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

X

பெண் பக்தர்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலம்
சேலம் அம்மாபாளையத்தில் உள்ள புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு சீர்வரிசை தட்டுகள் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இக்கோவிலில் ஊர் தலைவர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (புதன்கிழமை) வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சேவல் பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலையில் வெண்ணங்–ெகாடி முனியப்பன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக அம்மாபாளையத்தில் உள்ள புதுக்கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story