மத்திகிரி அருகே மினி லாரி மோதி இரண்டு பேர் உயிரிழப்பு.

X
உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமார் (24). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி அன்று இவரும் இவருடைய தம்பி ரிங்கு (18) நண்பா் குஷ்பு (29)ஆகிய 3 பேரும் சோ்ந்து டூவீலரில் மத்திகிரி அருகே சென்றனர். அப்போது எதிரே வந்த மினிலாரி இவா்கள் மீது மோதியது. இதில் குஷ்பு சம்பவத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரிங்கு, சேருகுமார் ஆகிய 2 பேரும் ஒசூா் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரிங்கு உயிரிழந்தார். சேருகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

