மலைக்கு செல்ல இன்றும் தடை

X

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல இன்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்த நிலையில் பரபரப்பாக காணப்பட்ட திருப்பரங்குன்றம் மாலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆர்ப்பாட்டத்தை பழங்காநத்தத்தில் நடத்துவதற்கு அனுமதி அளித்ததால் நேற்று மாலை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று மலைக்கு செல்வதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இந்த தடை இன்றும் தொடர்கிறது. மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story