பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது!
X
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் இருவர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் தலைமறைவாக கிழமை நள்ளிரவு நேரத்தில் முகமூடியு உள்ள ரவுடி டன் நுழைந்த 2 நபர்கள் திடீரென பெட் தமிழரசன். ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடினர். அதே போல சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள அரிசிக்கடை ஒன்றின் வாசலிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், கடையின் முன்பகுதி கருகி சேதம டைந்தது. போலீஸ் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையில், 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 4 துணை எஸ்பி அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலுடன் தொடர்புடையவர் களா? என்ற கோணத்தில் விசார ணையை தொடங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தன. சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியைச் பரத் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (வயது 48) மற்றும் அவரது கூட்டாளிகளான ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் வழக்கு பதிவு செய்ததற்காக, திட்டமிட்டு போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. சிப்காட் ஹவுசிங் போர்டை பூர்வீகமாக கொண்ட ரவுடி தமிழர சன் மீது கொலை, பணம் கேட்டு மிரட்டுதல், பெட்ரோல் குண்டு வீசுதல் ஆகிய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக ஊரில் இல்லை என்றாலும், வெளியூரிலிருந்து கொண்டு செல்போன் மூலமாக சிப்காட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் வணிகர்களை குறி வைத்து அடிக் கடி பணம் கேட்டு மிரட்டி தனது கூட்டாளிகள் மூலமாக பணம் பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
Next Story