இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி பலி

இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி பலி
X
குஜிலியம்பாறை மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி பலி, இருவர் படுகாயம்
குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை வயது 35. இவர் டி கூடலூர் ஊராட்சி புங்கமடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும், டூவீலரில் வீடு திரும்பினார். அந்த டூவீலரில் அவரது மகள் யோகனா 9, உள்ளிட்ட மொத்தம் நான்கு பேர் வந்துள்ளனர். டி.கூடலூர் திண்டுக்கல் ரோட்டில், கரும்பாறை பட்டி பிரிவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், ரோட்டோர மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில் வாகனத்தின் முன்னாள் உட்கார்ந்து வந்த அவரது மகள் யோகனா சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர் அரசு பள்ளியில் 4 - ம் வகுப்பு படித்து வந்தார். டூ வீலரை ஓட்டி வந்த சின்னத்துரை மற்றும் மற்றொரு மகள் காயம் அடைந்தனர். உடன் வந்த மேலும் ஒருவர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story