அதிரடியாக களமிறங்கும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு

அதிரடியாக களமிறங்கும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு - வருடத்தின் முதல் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் 2025 ம் ஆண்டின் முதல் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி,முன்னாள் அமைச்சர்.எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ. வழிகாட்டுதல்படியும், முன்னாள் அமைச்சர்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முனைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதல்படியும், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என் விஜயகுமார் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் சு.குணசேகரன் தலைமையில் திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளர்.மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா 44 வது மாமன்ற உறுப்பினர் எம்.கண்ணப்பன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர். ஹரிஹரசுதன், மாநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர். சி.எஸ் கண்ணபிரான். மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர். ஆண்டவர் பழனிச்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் எஸ்.ஐ சையது அலி, தெற்கு மத்திய பகுதி அம்மா பேரவை பொறுப்பாளர் ஐ.ஏ ஜவஹர்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநகர் மாவட்ட அலுவலகம் அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர். பிரேம்குமார், மாவட்ட தலைவர் எம்.எஸ் அருண்குமார், மாவட்ட துணைத்தலைவர் மோகன்குமார்,மாவட்ட இணைச்செயலாளர் தியாகமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் அஸ்லம், மாவட்ட இணைச்செயலாளர் சிலம்பரசன், மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது இஸ்ஹாக், மாவட்ட துணைச்செயலாளர் சதீஸ்குமார் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் டஸ்கி. விக்னேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தண்ணீர் தேடிய 30 ஆண்டுகால அத்திக்கடவு அவிநாசி திட்ட கேள்விக்கு தீர்வு கொடுத்த நாயகன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு அன்னூர் வருகை தருகின்றார். அக்கூட்டத்திற்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் நகர,ஒன்றிய,பேரூர் கழகங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவில் உறுப்பினர்களாக தேர்வு செய்து அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பது தொடர்பான ஆலோசனைகள் செய்யப்பட்டது.வரும் ஓரிரு நாட்களில் நகர,ஒன்றிய,பேரூர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story