அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி.

X

மதுரை மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னங்குடிபட்டியை சேர்ந்த பாண்டி (36) என்பவர் பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று (பிப்.4) மாலை இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்ற போது குன்னங்குடிபட்டி விலக்கில் நான்கு வழிச்சாலையை கடந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story