மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
X
நாகர்கோவில்
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த  பட்ஜெட் மக்களுக்கு எதிராக உள்ளது. கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு வரிகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை எளிய நடுத்தர மக்கள் மீதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் என அனைத்து தரப்பு மக்கள் மீதும் வரிகளை சுமத்தி உள்ளது. சம நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சிக்கு எதிராகவும் தமிழகம்,  கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி  மாநிலங்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும்,  இந்த பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.         நாகர்கோவிலில் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ நூர் முகம்மது தொடங்கி வைத்தார். மேலும் பலர் கலந்து கொண்டனர்.         குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கொல்லங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்ணநாகம் சந்திப்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கொல்லங்கோடு வட்டாரக்குழு செயலாளர் அஜித்குமார் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மேலும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story