மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து மத்திய அரசை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதி, மார்க்ஸ், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் பொன்மணி, கிளை செயலாளர்கள் பால் பக்கிரிசாமி, அன்பழகன், கோபி மற்றும் நிர்வாகிகள், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story