ஜெகதாபி கடைவீதியில் நடந்து சென்றவர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து.

ஜெகதாபி கடைவீதியில் நடந்து சென்றவர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து.
ஜெகதாபி கடைவீதியில் நடந்து சென்றவர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், ஜெகதாபி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 55. இவர் பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மணப்பாறை- கரூர் செல்லும் சாலையில் உள்ள ஜெகதாபி கடைவீதி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அதே சாலையில் டி என் 47 ஆர்.6467 என்ற எண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த நபர், நடந்து சென்ற மகாலிங்கத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகாலிங்கத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள ஜி.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.
Next Story