தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
X
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு நிலா, சூரியன், வேல், மயில் ஆகியவை பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11மணியளவில் கொடியேற்றம் செய்யப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது‌. கொடியேற்ற நிகழ்வில் பழனி கோவில் அறங்காவலர்கள், இணை ஆணையர் மாரிமுத்து, முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 10ம் தேதி மாலையும், தொடர்ந்து இரவு வெள்ளித்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஏழாம் நாள் திருவிழாவான 11ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தங்கும் அறைகள், குடிநீர், கழிவறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ய போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story