சென்னையில் நடந்த தேசிய அளவிலான வளைப்பந்து (டெனிகாயிட்) போட்டியில்

X

சென்னையில் நடந்த தேசிய அளவிலான வளைப்பந்து (டெனிகாயிட்) போட்டியில்
திருப்பத்தூர் மாவட்டம் சென்னையில் நடந்த தேசிய அளவிலான வளைப்பந்து (டெனிகாயிட்) போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் தங்கப் பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய அரசு பள்ளி மாணவர்களுக்கு ,வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அளித்த ஊர் பொதுமக்கள்.. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் கடந்த (31.1.2025) முதல் (4.2.2025) வரை 41வது தேசிய அளவிலான 15 வயது முதல் 18 வயதினருக்கான ஜூனியர் பிரிவிற்கான வளைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த வளைப்பந்து போட்டியில் மகாராஷ்டிரா, கேரளா ,ஆந்திரா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 21 மாநிலங்களின் அணிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 252 வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப்போட்டியில் கேரளா அணியை எதிர்கொண்டது இதில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது . அதேபோல் பெண்கள் பிரிவில் கர்நாடகா அணியை எதிர்கொண்ட தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக அணியை சேர்ந்த தமிழ் என்ற மாணவன் தமிழக அணியை சேர்ந்த சாலை அரிகிருஷ்ணனை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில். மணிமொழி என்ற மாணவி தமிழக அணியை சேர்ந்த மகேஸ்வரியை எதிர்கொண்டு இருந்திப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். தமிழக அணி ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆந்திரா அணியை எதிர்க்கொண்டு விளையாடி 3ம் இடத்தை பிடித்தனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் தமிழக அணி கேரளாவை எதிர்கொண்டு இறுதிப்போடியில் தங்க பதக்கம் வென்றனர். இரு பாலர்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப்போடியில் கேரளா அணியை எதிர்கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். தேசிய அளவில் வளைப்பந்து விளையாடி பல தங்கப்பதங்கங்களை வென்று ஊர் திரும்பிய திருப்பத்தூர் மாவட்டம், வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த வளைப்பந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வளையாம்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து மலர்த்துவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story