புதிய மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

புதிய மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் புதிய மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் - 2024 அரசாணையில் எண்:33 நாள்:23.01.2025 பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் குக்கிராமங்கள்/குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவான திட்டம் 2024 -ன் படி தமிழ்நாடு மாநிலத்தில் மினிபேருந்திற்கான கட்டண திருத்தம் 01.05.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களுடன் நாமக்கல் மாவட்டத்தில் மினிபேருந்திற்கான புதிய விரிவான இத்திட்டத்தின் கீழ் மினிப்பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் அமைப்புகள், மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுடன் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாமக்கல் (வடக்கு) இ.எஸ்.முருகேசன், நாமக்கல் (தெற்கு) ஏ.கே.முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story