தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் பொது விருந்து

அதியமான் கோட்டை அருள்மிகு காலபைரவர் திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரி எம்பி தலைமையில் பொது விருந்து
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட அதியமான் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு (ம) பொது விருந்து விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி சிறப்பு விருந்தினராக கலந்து உண்டு சுவாமி தரிசனம் செய்தார் பின்பு பொது விருந்தில் கலந்து கொண்டார். இந்தநிகழ்வில் அறநிலைத்துறை அதிகாரிகள், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கௌதமன், ஒன்றிய கழகச் செயலாளர் A.S. சண்முகம் கலந்துகொண்டனர்.
Next Story