நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது, போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

X

நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது, போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட கொங்கரை மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் மனைவி இந்திராணி, 80. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே இருந்தபோது, கொங்கரை மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் கருணா மூர்த்தி, 47, என்பவர், இந்திராணி கழுத்தில் இருந்து ஒரு சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இது குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் இந்திராணி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஒரத்தி போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, பின், பாண்டிச்சேரி பகுதியில் தலைமறைவாக இருந்த கருணாமூர்த்தியை கைது செய்து, அவரிடம் இருந்து தங்கச் செயினை மீட்டு இந்திராணியிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், குற்றவாளியை கண்டுபிடித்த ஒரத்தி போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Next Story