கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகி கூட்டம்

X

ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகி கூட்டம்
திண்டுக்கல்லில் ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சேது, முன்னாள் மாநில பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் பாலன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில், ஒன்றிய அரசு அறிவித்த 44 தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி மார்ச் 28ம் தேதி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஆயிரம் பேர் கலந்து கொள்வது. கட்டட தொழிலாளர் பென்ஷன் ரூ.6000வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கல்விச் செலவு முழுவதும் அரசை ஏற்க வேண்டும். இயற்கை மரணம் ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். விபத்து மரணம் 10 லட்சமாக வழங்க வேண்டும். உட்பட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. சுப்பையா நன்றி கூறினார்.
Next Story