மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
X
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 2025 - 26 ம் நிதியாண்டுக்கான பபட்ஜெட்டை அறிவித்தது. இதில், ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும், பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறி, மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வேடசந்தூர் ஆத்துமேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வேடசந்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் கே.நாகராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர் கே. பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் சி பாலச்சந்திர போஸ், ஒன்றிய செயலாளர் ஜி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.பெரியசாமி, ஏ. சவட முத்து, பி. செல்வம், என். நாகேஷ், பி.சக்திவேல், ஏ. முத்துக்குமார், பி. சங்க பிள்ளை, எஸ். பொன்மதி, N. காமலக்ஷ்மி, எம். முருக பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். வேடசந்தூர் மையக்கிளை செயலாளர் எம் .கே. வேலுச்சாமி நன்றி கூறினார். மேலும் கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story