பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா.

X

பாவை கல்வி நிறுவனங்களில் 24 வது பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா.
இராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சார்பில் பள்ளி மாணவர் மாணவிகளுக்காக 24 வது பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா நடைபெற்றது. விழாவினை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை ஏற்றுரூபவ் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் மு.ஜோதி கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமி வரவேற்புரை நல்கினார். தாளாளர் மங்கைநடராஜன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மு.ஜோதி சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் ‘வருடந்தோறும் இவ்விழாவினை இவ்வாறு சிறப்பாக நடத்தகின்ற பாவை கல்வி நிறுவனங்களின் உன்னதமான நோக்கத்தினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேசிய ஒருமைப்பாட்டு விழா மற்றும் விழாவில் ஏற்பாடு செய்திருந்த போட்டிகள் அனைத்தும் நம் தேசத்தையும்ரூபவ் தற்போது நிலவுகின்ற நம் சமூக சூழல்களின் நன்மைரூபவ் தீமைகளையும் மாணவர்களாகிய நீங்கள் நன்கு அறிந்து கொள்ளவும்ரூபவ் அவைகளைப் பற்றி பொறுப்பான குடிமக்களாக உங்கள் சிந்தனைகளை மேற்கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கிறது. இளம் மாணவரூபவ் மாணவிகளாகிய நீங்கள் சிறந்த தலைவர்களாகரூபவ் வெற்றியாளர்களாக உருவாக வேண்டுமென்றால்ரூபவ் மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சொன்னது போலரூபவ் உங்கள் துறையில் உயர்ந்த இலட்சியம் கொண்டவர்களாகத் திகழ வேண்டும். அதனோடு அந்த இலட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்ரூபவ் தனித்துவமாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்த இலட்சியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சாதிக்கக் கூடியதாகவும்ரூபவ் அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பின்பு அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தேவையான அறிவினை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைப்பவர்களாகத் திகழ வேண்டும். எப்பொழுதும் தேசபக்தியும்ரூபவ் தெய்வ பக்தியும் கொண்டவர்களாகத் திகழுங்கள். பெற்றோர்களிடமும்ரூபவ் ஆசிரியர்களிடமும் மதிப்புடனும்ரூபவ் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். மாணவர் மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி என்பது அழியாச் சொத்தாகும். மாணவப் பருவத்தில் இதுபோன்ற போட்டிகளில் பரிசினை வெல்வதற்காக நீங்கள் செலுத்தும் ஆர்வமும் முனைப்பும் எதிர்காலத்தில் உங்கள் வாழ்விலும் பிரதிபலித்து உங்கள் வாழ்வினையும் வெற்றியுள்ளதாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் மாற்றும். நீங்கள் அனைவரும் தலைசிறந்த சான்றோர்களாக உருவாக உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்,என்று பேசினார். முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினார். பின்னர் மாணவர் மாணவிகள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர் மாணவிகள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டறிந்துரூபவ் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர். இவ்விழாவில் நாமக்கல்; மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தரூபவ் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 1700 மாணவரூபவ் மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் கட்டுரைரூபவ் ஓவியம்ரூபவ் நடனம்ரூபவ் கவிதைரூபவ் பாட்டுரூபவ் வினாடி வினாரூபவ் பேச்சுப்போட்டிரூபவ் கோலம் மற்றும் அறிவியல் கண்காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக பாவை கல்வி நிறுவனங்களின் முதன்மையர் (ஆலோசனை) சி.ஜெயலெட்சுமி நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில் முதன்மையர்கள் முதல்வர்கள் துறைத்தலைவர்கள் பேராசியர்கள் மற்றும் பள்ளி மாணவர் மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story