நாமக்கல் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் பராமரிப்பு பணி !

X

நாமக்கல் இரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, எனவே பயணிகள் முன்கூட்டியே இரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.
நாமக்கல் மாவட்ட இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... நாமக்கல் இரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் கனரக வாகனங்களை கொண்டு நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் இரயில் பயணிகள் இரயில் வரும் நேரத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை சற்றே பொருத்துக்கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story