வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம்

வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூட்டப்பள்ளி காலனி அமைந்துள்ளது இங்கு நாலாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன கூட்ட பள்ளி பகுதியை ஒட்டி கூட்டப் பள்ளி ஏரி 11 ஏக்கரில் இருந்தது இந்நிலையில் நகராட்சி குப்பை கிடங்காக கூட்டப் பள்ளி ஏரி மாறியதால் ஏரி சுருங்கி கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கூட்டப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது இந்நிலையில் திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் 36 கோடி ரூபாய் செலவில் கூட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து இடத்தை தேர்வு செய்தது இதனை அறிந்த கூட்ட பள்ளி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 30 ஆம் தேதி திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் கொடுத்தனர் இந்நிலையில் இரண்டாம் கட்ட போராட்டமாக இன்று கூட்ட பள்ளி பகுதியில் உள்ள 4500 குடியிருப்புகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் இந்த போராட்டம் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நல அமைப்பின் தலைவர் பத்மநாபன் கூறும் போது எங்கள் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 30ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் இன்று நாங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எங்களது எதிர்ப்பை பதிவு செய்கிறோம் இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார் இவரை தொடர்ந்து பேசிய துளிரும் கூட்ட பள்ளி அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறும் போது 11 ஏக்கர் பரப்பளவு உள்ள கூட்ட பள்ளி ஏரி நகராட்சி குப்பை கிடங்காக மாறியதால் அது கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது அதில் உள்ள மூணரை ஏக்கர் மட்டும் எங்கள் முயற்சியால் நீர் நிலையாக மாற்றினோம் தற்போது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவே இந்த ஏரியை தூர்வாரி நீர் நிலையாக மாற்ற வேண்டும் ஊருக்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த போராட்டத்தில் இந்தப் பகுதியில் இருப்பவர்கள் வீடு வீடாகச் சென்று கருப்பு கொடி கட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் கருப்புக்கொடி போராட்டத்தால் கூட்டப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story