நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றிய பெண்கள்

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி திருத்தணி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பெண்கள்
திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி திருத்தணி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பெண்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் 7000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் விவசாயம் மற்றும் 100 நாள் பணிகளை மட்டுமே நம்பி உள்ள ஒரு கிராமம் ஆகும் இந்த கிராமத்தை இந்த ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் மேற்கொண்டனர் மேலும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கிராம சபையை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள் இதனால் அன்று அரசு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு செய்ததால் ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் இந்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை செய்து இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்தனர் இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவு அதிகாரி பஞ்சாட்சரம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் ஆகியோர்கள் முன்னிலையில் கிராம சபை இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சி இணைக்க கூடாது என்று தீர்மானம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் மேலும் இதே தீர்மானத்தில் அரசு வழங்கிய அடையாள அட்டைகளான, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போன்றவற்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கி எறிவோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அதிகாரிகளுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு இந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சனைகள் எதுவும் நேராமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்போம் மேலும் கிராம சபைக்கு வந்த பெண்கள் கூறுவது வீட்டு வரி குடிநீர் வரி கட்டாதவர்களுக்கு 100 நாள் பணிகள் ஒதுக்க மாட்டோம் என்று அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் ஆகியோர்கள் கூறுகின்றனர் எங்களை ஏன் இப்படி வஞ்சிக்கின்றீர்கள் என்று கிராம மக்கள் பெண்கள் அதிகாரிகளிடத்தில் காரசாரமாக கேள்வி எழுப்பினார்கள் இதனால் இந்த கிராம சபை கூட்டம் பெரும் பரபரப்புடன் இன்று அடைந்தது....
Next Story