அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
X
இராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் கவிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இரகுநாதன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முத்துச்செல்வன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கீதா பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கந்தசாமி , விஷ்வா பைக் ஸ்டண்ட் உரிமையாளர் பெருமாள் , பள்ளியின் முன்னாள் அறிவியல் நல்லாசிரியர் லோகநாதன் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பாராட்டினார்கள். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சு.பூபதி நன்றி உரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஆண்டு விழாவுக்கான நிகழ்ச்சிகளை பள்ளியின் ஆசிரியர் மா.பாஸ்கரன் தொகுத்து வழங்கினார்கள்.
Next Story