டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
X
மருத்துவக் கல்லூரி மாணவர் இறந்தார்
அரியலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் விண்ணரசன் (24). இவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2 -ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்நிலையில், விண்ணரசன் அதே கல்லூரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பருடன், நாகை அரசு மருத்துவமனையில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, மோட்டார் சைக்கிளில் வந்தனர். வகுப்பு முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விண்ணரசன் ஓட்டினார். நாகை மேலக்கோட்டை வாசல் அருகே சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த விண்ணரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்து இருந்த தமிழ்ச்செல்வன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து, நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story