பரோல் கைதி தூக்கிட்டு தற்கொலை

X

மதுரை உசிலம்பட்டி அருகே பரோலில் வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி தென்கால் பட்டி தென்கால் நகரை சேர்ந்த சிவனாண்டி யின் மகன் முருகன் (23) என்பவர் செக்கானூரணி பொன்ராஜ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டி ருந்தார். இதைத்தொடர்ந்து அவர் பரோலில் வெளியே வந்தார்.திருச்சியில் மனைவி யுடன் வசித்துவந்தார். அவர் பெற்றோரை பார்க்க தென்கால்பட் டிக்கு வந்திருந்தார் . அங்கு குடிபோதையில் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் அவர்கள் கோபித்துக் கொண்டு வெளியூர் சென்று விட்டனர் . இந் நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பெற்றோ ருக்கு தெரிவிக்கப்பட் டது. அவருடைய தந்தை சிவபாண்டி வந்து பார்த்தபோது முருகன் இறந்து அழுகிய நிலையில் தூக்கில் தொங்கினார்.இது குறித்து தந்தை சிவ பாண்டி செக்கானூரணி காவல் நிலையத்தில் நேற்று (பிப்.4)புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story