வள்ளலார் கல்வி நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு

X

வள்ளலார் கல்வி நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
அரியலூர், பிப்.5- தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் செயலர் கொ.வி.புகழேந்தி தலைமை வகித்தார். மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுமித்சைமன் கலந்து கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த எவருக்கும் தொழுநோய் வரலாம். மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற கிருமி தாக்குதலால் தொழுநோய் உண்டாகிறது.தொடர்ந்து பெறும் சிகிச்சையால் தொழு நோயை முழுவதும் குணமாக்க முடியும் என்று தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.சுகாதார ஆய்வாளர்கள் மணி, அருள்பிரியன், கார்த்திக், ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர் பொ.சௌந்தரராஜன் வரவேற்றார்.
Next Story