ராஜலிங்கேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

ராஜலிங்கேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ராஜன் தாங்கலில் ஸ்ரீ ராஜ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில், பாண்டிச்சேரி, வேட்டவலம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஊர்களிலிருந்து25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாக் குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தட்சிணாமூர்த்தி தலைமையில், முன்னாள் வைஸ் சேர்மன் மருந்தாளுநர் மணி,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், நாட்டாண்மைதாரர்கள் சுகுமார்,சரவணன், சின்னத்தம்பி,ஆறுமுகம், வேலு‌ மற்றும் பொதுமக்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story