பால்ராஜபுரம் ஊராட்சி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

பால்ராஜபுரம் ஊராட்சி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
பால்ராஜபுரம் ஊராட்சி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பால்ராஜபுரம் ஊராட்சியில் உள்ள சுவாதி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா இன்று துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக கூட்ட அரங்கில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த செயல்திட்ட விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், துறை ரீதியான அதிகாரிகளிடம் செயல் திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்டு பெற்றார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
Next Story