மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் விவசாயிகள் பெற விவசாயிகளை அடையாளப்படுத்தும் முகாம் நாளை நடைபெறுகிறது- சிவானந்தம்.
மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் விவசாயிகள் பெற விவசாயிகளை அடையாளப்படுத்தும் முகாம் நாளை நடைபெறுகிறது- சிவானந்தம் விளக்கம். கரூர் அடுத்த பால்ராஜபுரம் ஊராட்சியில் சுவாதி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, துணை ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்,வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், கலால் உதவி ஆணையர் கருணாகரன், பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சிவானந்தம் நாளை முதல் விவசாயிகளை அடையாளப்படுத்தும் முகாம் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது எனவும், ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு பதிவு செய்து கொண்டால் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை உள்ளிட்ட 13 துறைகளில் விவசாயிகளுக்கு தேவையான மத்திய, மாநில அரசுகளின் மானியத்தை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும், எனவே விவசாயிகள் நாளை நடைபெறும் முகாமில் தங்கள் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Next Story




