பைக்கை இடித்து விட்டதாக நடுரோட்டில் குறுக்க போட்டு பைக் ஓனர் அட்ராசிட்டி! கார் ஓட்டுனரிடம் வாக்குவாதம்!

பைக்கை இடித்து விட்டதாக நடுரோட்டில் குறுக்க போட்டு பைக் ஓனர் அட்ராசிட்டி! கார் ஓட்டுனரிடம் வாக்குவாதம்!
திருப்பத்தூர் மாவட்டம் பைக்கை இடித்து விட்டதாக நடுரோட்டில் குறுக்க போட்டு பைக் ஓனர் அட்ராசிட்டி! கார் ஓட்டுனரிடம் வாக்குவாதம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகே திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் ஜின்னா ரோடு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதேபோல காரில் 35 மதிக்கத்தக்க நபர் தன்னுடைய குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இருசக்கர வாகனத்தை காரின் முன்பு நடுரோட்டில் குறுக்கே போட்டு கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வாகன ஓட்டிகள் எடுக்கும்படி கூறி சத்தம் போட்டதால் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது…
Next Story