கோவை: கள்ளக்காதலனை அறிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவர் !

X

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை குத்திக் அறிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவரால் பரபரப்பு.
தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகரன் (45) என்பவரது மனைவி வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வாணிப்பிரியா தனது குழந்தைகளுடன் கோவையில் தனியாக வசித்து வந்தார். அப்போது, கோவையைச் சேர்ந்த மகேந்திரன் (45) என்பவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரபாகரனுக்கு தெரியவரவே, அவர் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வாணிப்பிரியா வீட்டிற்கு வந்த பிரபாகரன், அங்கு மகேந்திரனை கண்டதும் ஆத்திரமடைந்தார். வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த வாணிப்பிரியாவையும் கழுத்தில் வெட்டியுள்ளார். பின்னர், தனது மகனை அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.படுகாயமடைந்த வாணிப்பிரியா தனது நண்பருக்கு தகவல் தெரிவிக்க, அவர் போலீசுக்குத் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாணிப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story