இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
X
சிவகங்கை மாவட்டம், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 28.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெற, ஒரு தொழிற்பள்ளி இணையதளம் வாயிலாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. அதுமட்டுமன்றி, விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள், தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பித்திடல் வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் RTGS/NEFT மூலமாக செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 5,000/- மற்றும் ஆய்வு கட்டணமாக ரூபாய் 8,000/- செலுத்த வேண்டும். மேலும், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிக்கு வருகின்ற 28.02.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். 28.02.2025 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், கூடுதல் விபரங்களுக்கு 04575 -290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story