மூன்று ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சமுதாயக்கூடம்

X
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் சுமார் மூன்று ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருக்கும் சமுதாயக்கூடம் 2003 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் அமைச்சர் பி வி ரமணா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த சமுதாயக்கூடம் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களின் வீட்டு விசேஷங்கள் விலையில்லாமல் இலவசமாக இந்த சமுதாய கூடத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது நடைபெறும் திமுக ஆட்சியில் இந்த சமுதாயக்கூடம் சுமார் 3 ஆண்டு காலமாக நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம கூறுகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த சமுதாயக்கூடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை பல ஆயிரம் கொடுத்து மண்டபங்களில் நடத்தக்கூடிய அவலம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இதற்கு எதற்காக சமுதாயக்கூடம் என்று பெயர் வைத்தார்கள் என்றும் ஆதங்கமாக தங்கள் வேதனைகளை தெரிவித்தனர் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை அகற்றி திரும்ப மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தங்கள் உணர்வை வெளிப்படுத்துகின்றனர்
Next Story

