கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு சாலைகளில் வாகனங்கள் செல்வது கூட தெரியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்
திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு சாலைகளில் வாகனங்கள் செல்வது கூட தெரியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. விடியற்காலை திடீரென சூழ்ந்த கடும் பனிப்பொழிவு காரணமாக எதிரேவரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் உள்ளதால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களில் கடும் சிரமத்துடன் சென்றனர் அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பனிமூட்டம் காரணமாக கடும் சிரமம் அடைந்தனர் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால் குடியிருப்பு பகுதிகளிலும் பனிப்பொழிவு சூழ்ந்து குளிர்ச்சியான காலநிலை ஊட்டி கொடைக்கானல் போன்ற கோடை வாஸ்தலங்களை போன்று தற்போது திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மாறி காட்சியளிக்கிறது.
Next Story